சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5 வயது மகன் விஜின் இளவரசன். இவர் சிவகங்கை
வானியங்குடியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினந்தோறும் பள்ளி வேனிலேயே பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல் பள்ளி வேனில் இருந்து இறங்கி பின்புறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார். இதில் எதிரேவந்த அரசு பேருந்து மோதியதில் சிறுவன் விஜின் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில். அங்கு திரண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் வேனில் உதவியாளர்கள் இருந்தும் சிறுவனை தனியாக சாலையை கடக்க வைத்து விபத்தில் சிக்கி உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பெதகார் சிலை அருகே சாலையை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சிறுவனின் தந்தை உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பொதுமக்கள் தடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன் சிறுவனின் பெற்றோரிடம் ஆர்.டி.ஒ முத்துக்கழுவன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.