கேரளாவில் பேருந்தின் முன் விழுந்து நொடிப்பொழுதில் சிறுவன் உயிர்தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் சைக்கிளில் வேகமாக வந்த சிறுவன் சாலையை கடக்க முயற்சிக்கையில் அதிர்ஷ்டவசமாக பேருந்து விபத்தில் இருந்து உயிர்பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டுள்ளது. இதனிடையே சிறுவன் ஒருவன் மின்னல் வேகத்தில் சாலையை கடக்க முயசிக்கிறான்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் மோதி சாலையின் மறுபுறத்தில் தூக்கி வீசப்பட்டான். இதனால், இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த பேருந்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான். அவன் வந்த சைக்கிள் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தின்போது பதிவான பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.







