இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்த 4 பேரை காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை மன்னாரில் இருந்து தமிழர்களான கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர் ஆகியோர் நான்கு மாத கைகுழந்தையுடன் ஃபைபர் படகில் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, இந்த தகவலறிந்து இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிரப்ட் கப்பல் விரைந்துள்ளது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் ஆறு தமிழக இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர். விசாரணையின் போது, இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி நிலவி வருவதால், அந்த 6 இலங்கை தமிழர்களும் தமிழ்நடிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி விஜய் ஆனந்த், ஒரு கைக்குழந்தை உட்பட நால்வரை மட்டும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இரண்டு குழந்தைகளை சேலத்தில் உள்ள அவர்களுடைய பாட்டியுடன் தங்குவதற்கும் நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில், தஞ்சம் அடைந்தவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, முகாமில் தங்க வைக்க அரசாணை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.