GOLD RATE : இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன…?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு கண்டுள்ளது.

தங்கம் விலை தினம் தினம் புதுபுது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி நேற்று முன்தினம் (ஜூலை 18) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் (ஜூலை 20) உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13, 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05, 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 235-க்கும் கிலோ வெள்ளி ரூ. 2, 35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.