நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால் டெல்லியின் ஜந்தர் மந்தர் , நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள விஜய் சௌக் , இந்தியா கேட் , மத்திய அமைச்சர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள 5 மெட்ரோ நிலையங்களிலும் மூடப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையானது அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் அனுமதியை மீறி நகர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு பணிகளில் டெல்லி காவல்துறை , துணை ராணுவப் படையினர் , அதிரடி படையினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரனி அறிவித்தது. தனக்கு ஆதரவான குரலில் உள்ள அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என சோனம் வான்சுக் கோரிக்கையை விடுத்து இருந்தார். இதனால் நேற்று இரவு முதலே பலர் டெல்லி ஜந்தர் மந்தரில் கூடிவரும் நிலையில், பதட்டமான சூழல் நிலவுகிறது.




