GOLD RATE; தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்துள்ளது.

தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும். கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,820-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.