தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே கடந்த 11-ம் தேதி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை சரிவை கண்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




