குளித்தலையில் இளம்பெண் ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாடியுள்ளார். மேலும் அந்நிர்வாகி மீது காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்,,,? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




