உதவி மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய் இன்று உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், “நலம் TN” இணைய தளத்தினை துவங்கி வைத்தார். மேலும் அவர் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அது மட்டுமின்றி ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்து, நவீன உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.