தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்ந்த வாரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலையில் குறைந்து தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 890-க்கும், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துடன் வெள்ளியின் விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5,000 ரூபாய் அதிகரித்து பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




