முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திரா பயணம்…!

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் விஜய் ஆந்திரா செல்கிறார்.

தென் மாநில நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, முதலமைச்சர் விஜய் இன்று சந்தித்து பேசவுள்ளார்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திரா ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். எனினும், இந்தாண்டு அக்.9-ம் தேதி வரை தமிழகத்துக்கு 2.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனுடன் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் முதலமைச்சர் விஜய், இன்று பிற்பகல் ஆந்திரா செல்கிறார். ஒன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானாத்தில் புறப்படும் முதலமைச்சர் விஜய் 3; மணியளவில் ஆந்திர மாநிலம் ஞானாவரம் விமான நிலையத்திற்கு சென்றடைகிறார்.

இதனைத்திடர்ந்து மாலை 4:15 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். மேலும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யானையும் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு ஆந்திரா இடையிலான முக்கிய நதிநீர் பிரச்னைகளை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதனைத்தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெறும் ‘விஜயவாடா உத்சவ் – 2026’ நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். பின்னர் முதலமைச்சர் விஜய் மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனையடுத்து இன்றிரவு 8:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

முன்னதாக காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா செல்ல திட்டமிட்டு இருந்தார் பின்னர் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.