நேபாளம் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சில்லி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று முந்தினம் காலை சுமார் 8:30 மணி அளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீடுகும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்கள் 8 மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நேபாள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தியர்கள் நேபாளம், திபெத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி வெளிநாட்டினர் உள்பட 1468 பேர் மாயமாகி உள்ளனர். இதில் நேபாளத்தில் உள்ள 517 வெளிநாட்டினர் உள்பட 910 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே 90 அமெரிக்கர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர் என்றும் அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.