தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து நரிந்து வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கு, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




