ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஜப்பானில் உள்ள ஆய்ச்சி நகோயா மாகானத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் இன்ற கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்தியாவின் தனிபார்த்தி சிகிதா ராவ், சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஆகியோரது அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இறுத்கிப் போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுபாக நடைபெற்ற இப்போட்டி 157-157 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து சூட்-ஆப் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 20-19 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் தங்களின் இடத்தை உறுதி செய்துள்ளனர்.

இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 8-வது தங்கப்பதக்கமாகும். முன்னதாக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.