ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஜப்பானில் உள்ள ஆய்ச்சி நகோயா மாகானத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் இன்று மகளில் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 234-233 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, சிக்கிதா தனிபர்த்தி மற்றும் பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 238-234 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம், 2014-ஆம் ஆண்டு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது தென் கொரியா வைத்திருந்த உலக சாதனையையும் இந்தியா சமன் செய்தது.

மேலும் வுனியர், யூ வாங் மற்றும் ஃபாங்யாவோ வெய் ஆகியோரைக் கொண்ட சீன அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 2026, 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.