GOLD RATE : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு……… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி……!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950-ம், சவரனுக்கு ரூ. 7,600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.