மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC), நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி
பொது மருத்துவ அலுவலர்கள் உட்பட என நாடு முழுக்க காலியாக உள்ள 1,358 மருத்துவ பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பணியிடங்கள் விவரம்:
மத்திய சுகாதார சேவையின் பொது மருத்துவ அலுவலர்கள் துணைப்பிரிவு (MO) – 864
இந்திய ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அலுவலர்களுக்கு (ADMO) – 450
டெல்லி மாநகராட்சி பொது மருத்துவ அலுவலர் (GDMO) – 14
டெல்லி மாநகராட்சியில் உள்ள ஜெனரல் மருத்துவ அலுவலர்கள் நிலை II – 30
கல்வித்தகுதி மற்றும் தேர்வுமுறை
கல்வித் தகுதியை பொருத்தவரை எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 2026 ஆகஸ்ட் 1 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறையை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது…?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 2026 மார்ச் 11 முதல் – 2026 மார்ச் 31 வரை , UPSC வலைத்தளத்தின் ‘Careers’ என்ற பிரிவின் வழியாக தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.







