சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு ஜன.21-ல் நடைபெறும் என அறிவிப்பு!
அந்த வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







