கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

மூன்றாவது ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இதில் கபடி போட்டியில் பங்கேற்ற இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீராங்கனையான கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகோதரிகளின் அபாரன விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை . மென் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.