கோகுல்ராஜ் கொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கோகுல்ராஜ் தாயார் சித்ரா மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐவரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் நிலையில் அதனை ஏற்று மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல, கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்தனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றும், அவற்றை அவை தொடர்பான வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.