குரோம்பேட்டையில் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி கண் தானம் செய்தார்.
மாணவர்கள் தங்களின் நண்பர்களுடன் இனைந்து கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே டாகடர் அகர்வால் கண்
மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய 17வது கண் மருத்துவமனை
திறக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி
குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர் தன்னுடைய கண்களையும் தானமாக தர உறுதிமொழி எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே பாலாஜி, “சிறு வயதிலிருந்தே என்னுடைய கண்களை தானமாக வழங்கும் எண்ணம் இருந்து வந்தது. அதற்கான தக்க தருனம் இந்த கண் மருத்துவமனையின் திறப்பு விழாவில் நிறைவேறிவுள்ளது.
மாணவர்கள் அனைவரும் தங்களின் நண்பருடன் இனைந்து கண்களை தானம் செய்வதற்க்கு முன் வர வேண்டும்” என்றார்.








