94 ஆண்டுகால ‘மிஸ் இங்கிலாந்து’ வரலாற்றை மாற்றி எழுதிய இளம்பெண்

அழகு சாதன பொருட்களும் ஒப்பனை முகங்களும் தான் “அழகு” என்ற பிம்பம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், அதை தகர்க்கும் வண்ணம் ஒப்பனையின்றி அழகு போட்டியில் ராம்ப் வாக் செய்து 94 ஆண்டு கால வரலாற்றையே…

அழகு சாதன பொருட்களும் ஒப்பனை முகங்களும் தான் “அழகு” என்ற பிம்பம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், அதை தகர்க்கும் வண்ணம் ஒப்பனையின்றி அழகு போட்டியில் ராம்ப் வாக் செய்து 94 ஆண்டு கால வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிறார் 20 வயதான மெலிசா ராப்.

லண்டனில் பிறந்து வளர்ந்து தற்போது கல்லூரியில் அரசியல் பயிலும் மெலிசா ராப், மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்டார். அழகு போட்டி என்றாலே மினுமினுக்கும் ஆடைகள், ஆபரணங்கள், அதற்கேற்ப ஒப்பனை என வெளிதோற்ற அழகை நினைவுபடுத்தும் நமக்கு அழகு என்பது அதுமட்டும் அல்ல என்று உணர்தியிருகிரார். 94 ஆண்டு “மிஸ் இங்கிலாந்து” வரலாற்றிலேயே ஒப்பனையின்றி ராம்ப் வாக் செய்த முதல் பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அரையிறுதி போட்டியில் நடந்த இச்சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இது குறித்து மெலிசா ராப் கூறுகையில், “பெண்கள் மத்தியில் பரவலாக மேக் அப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. இதனால், ஒருவித அழுத்தத்தின் விளைவாக தான் ஒப்பனை போட்டு கொள்கிறார்கள். ஆனால், வழக்கமான பாணியை பின்பற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை” எனத் தெரிவித்தார்.

எனது சொந்த தோலில் நான் அழகாக இருக்கிறேன் என்பதை சமீபத்தில் ஏற்றுக்கொண்டேன், அதனால்தான் மேக்கப் இல்லாமல் போட்டியிட முடிவு செய்தேன் என்ற அவர், “என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒப்பனைகள் மூலம் என்னை நான் மறைக்க விரும்பவில்லை. மெலிசா யார் என்பதை உண்மையில் காட்ட விரும்பினேன்” என்று கூறுகிறார்.
இவரின் இந்த துணிச்சலான செயல் உலக மக்களின் பாராட்டையும் அன்பையும் பெற்று தந்திருக்கிறது. மேலும் இறுதி சுற்றில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் எனவும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. இதன் விளைவாக வரலாற்றின் அடுத்த மைல் கல்லாக ஒப்பனையின்றி ராம்ப் வாக் செய்வதற்கு ஒரு புதிய சுற்றை “மிஸ் இங்கிலாந்து ” அறிமுகப்படுத்தயுள்ளது. அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் இருக்க வேண்டும் என்பதை உணர்தியிருக்கிரார் இந்தஇருபதே வயதான மெலிசா ராப்.

– ஐஸ்வர்யா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.