திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்து, 4 ஆடுகள் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரி பகுதியைச்
சேர்ந்த கலைச்செல்வி வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்,
வழக்கம்போல் இரவு ஆடுகளை வீட்டின் அருகே கட்டியுள்ளார்; காலையில் பார்த்தபோது கட்டப்பட்டிருந்த 4ஆடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை, திருவோணம் பகுதியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆட்டின் உரிமையாளருடன் சந்தையில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, காணாமல் போன நான்கு ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற ரெங்கராஜ் (50)என்பவரை எடையூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4 ஆடுகள் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ரூபி.காமராஜ்