’அயலான்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அயலான் திரைப்படத்தில் வரும், ஏலியன் கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம்!! – திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் பேச்சு…

சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அயலான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு இன்று காலை அறிவித்தது.

https://twitter.com/arrahman/status/1650502813338697729?t=KXMG8FgFPyUXt284JriUxA&s=08

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வீடியோ, படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.