முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .

ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை,
கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் இதனுடைய கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிறுவனம் தொடங்கியது முதல் ஆண்டு ஒன்றுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அதன் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் நேற்று முதல் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது மாநில காவல் முறையை பயன்படுத்தாமல் மத்திய ரிசர்வ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று அதிகாலை வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் பிரவின் மற்றும் பாலா, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவரது மகன் கார்த்திக் உள்ளிட்டோரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று 2வது நாளாக இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், மைசூரு, திருச்சி உள்ளிட்ட 50 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுபில் இருக்கும், சுதிர், பிரவின்,பாலா, ஆதவ் அர்ஜூன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மகன் மோகன் கார்த்திக் உள்ளிட்ட 19 நிறுவனங்கள், வீடுகளில் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் விலக்கு நடவடிக்கை பகடை ஆட்டமாக மாறிவிடக்கூடாது – ராமதாஸ்

Halley Karthik

”கர்நாடக முதல்வர் யார்? இன்று முடிவு தெரிந்துவிடும்” – சித்தராமையா பேட்டி

Jeni

பொதுக்குழு – முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஓபிஎஸ்

Halley Karthik