நெசவாளர்களுக்கு தேவையான நூல், தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி, தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேவதானம் முத்துச்சாமிபுரம் கணபதி சுந்தரநாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தபோது பெண்கள் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய அவர், முதியோர் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நெசவாளர்களுக்கு தேவையான நூல் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை செய்து தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும் பேசிய அவர், முதியவர்களுக்கு முதியோர் தொகை குறித்து மனுக்கலை வாங்க தனியாக முகாம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதன் மூலம் வாங்கிய மனுக்கலை உடனடியாக ஆன்லைனில் ஏற்றி முதியோர்களுக்கு உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.







