சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் லாட்ஜ் மேலாளர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சாந்தா (30) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு அவ்வப்போது மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம்
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து சிறுமியை
அவர்களிடமிருந்து மீட்டு விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 14ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இத்தொழிலுக்கு உடந்தையாக இருந்து அச்சிறுமியை பலாத்காரம் செய்த லாட்ஜ் உரிமையாளர் கந்தசாமி (45 ) என்பவர் சில நாட்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லாட்ஜின் மேலாளர் தனவேல் (58) என்பவரையும், நாகமங்கலம் பாலச்சந்திரன் (23) மற்றும் தஞ்சாவூர் கீழவாசல் வினோத் (29) ஆகிய 3 பேர் மீதும் பாலியல் குற்ற வழக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.