இடி தாக்கியதில் செல்போன் வெடித்து பிளம்பர் பலி

சிவகங்கை அருகே இடி தாக்கியதில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, பிளம்பர் வேலை செய்து வருகிறார்.…

சிவகங்கை அருகே இடி தாக்கியதில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இன்று மாலை அவர் மூலிகை செடிகள் பறிப்பதற்காக தனது கிராமத்தின் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தன்னுடைய செல்போனை கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்துள்ளார்.

மைதானத்தில் மூலிகை பறித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது இடி தாக்கியுள்ளது. இதில் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்த நிலையில், நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.