இளம் பேச்சாளர்கள் கிடைப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப்போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில்…

வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப்போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கனல் தெறிக்கும் வசனங்களை பேசி தமிழர்களுக்கு உணர்வூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், பகுத்தறிவு கருத்துளை பட்டென சொன்னவர் பெரியார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி…

வரலாறு போற்றக்கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப் போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை எனக்கூறிய அவர், இளம் பேச்சாளர்களின் உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் இளம் பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக பல பணிகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.