சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன்  ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 21-இல் ஏடிஎஸ்…

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன்  ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 21-இல் ஏடிஎஸ் தெருவில்
மினி லோடு வேன் டாட்டா ஏசி வாகனத்தில் 3.5 டன் அளவுள்ள ரேஷன் அரிசி வெளி
மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்
அடிப்படையில் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அழகிரி
தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தனர். அதில் சாக்கு பைகளில் ரேஷன் அரிசி கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து  ஏசி வாகனத்தில் இருந்த தயாளன் பழனி என்ற இருவரையும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்த நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரணையில் தயாளன் பழனி என்ற இருவரும் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனவும் குடியிருப்பு பகுதிகளில் ரேஷன் அரிசியை சில்லறையில் கொள்முதல் செய்து வெளிமாநிலங்களில் தீவன கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பது தெரியவந்துள்ளது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.