தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “காவேரிக்கு அனைவரும் ஒன்று கூடுவோம். தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்க வேண்டும். சாலிகிராம் பகுதியில் உள்ள மது கடைகள் மூடவில்லை. மூத்த தலைவர்கள் நினைவுகளை நினைவு கூற வேண்டும். கர்நாடகாவில் அனைத்து கட்சியும் ஒற்றுமையாக இணைந்து தங்களுடைய நிலைப்பாட்டை நிரூபிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அப்படி இல்லை. கர்நாடக விவகாரத்தில் விஜயை அவமானம் செய்தால், நாங்கள் அனைவரும் அவர் பின்னால் நிற்போம். அனைத்தையும் அரசியலாக எடுத்து கொள்ள கூடாது. கர்நாடக முதலமைச்சரை தமிழகத்திற்கு வர வையுங்கள். விவசாயம் நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும். நாளை நடைபெறும் எம்பிக்கள் கூட்டத்திற்கு இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.




