முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று  திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு உள்ளிடோர் பங்கேற்றனர்.  திமுகவின் 11 குழுக்களின் உறுப்பினர்கள், 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அணிகளின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான குழுக்களை ஏற்படுத்துவது, தொடர் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.  திமுக அரசின் சாதனைகளை பரப்பும் வகையில் சமூக ஊடகங்கள், தேநீர்க்கடை, திண்ணை பரப்புரைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று  நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ள பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் அவர் கூறினார்.  கட்சியின் அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதிக்கொண்டு இருக்காமல் களத்தில் பணியாற்ற வேண்டும் எனறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அம்மா உன்னை மிஸ் பண்றேன்: கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

EZHILARASAN D

மதுரையில் பன் பரோட்டோ கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

G SaravanaKumar

’21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

G SaravanaKumar