கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே, வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித் துள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசித் திட்டம் நாடு முழுவ தும் பரபரப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூ சிகள் போடப்பட்டு வருகின்றன.
முதல் டோஸ் தடுப்பூசி போட்டதும் அதற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்கி வருகி றது. அந்தச் சான்றிதழில் தடுப்பூசி போட்டவர் பெயர், வயது, பாலினம், கொரோனா மருந்து, தடுப்பூசி போட்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தச் சான்றிதழை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கி வைத்திருப்பது அவசியம்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலமாகவே இந்த சான்றிதழைப் பெறலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 90131 51515 என்ற வாட்ஸ் அப் எண்ணை போனில் சேமிக்க வேண்டும். பிறகு ‘Covid Certificate’ என டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனடியாக ஓடிபி உங்கள் எண்ணுக்கு வரும். அதைப் பதிவு செய்து அனுப்பியதும், தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.









