205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றோடு நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 205 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி இன்றுடன் (08.08.2021) முடிவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றுள் ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்கா, 39 தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான், பிரிட்டன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது.
போட்டிகள் முடிந்த பின், 30 நிமிடங்கள் நடந்த நிறைவு விழாவில், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
நிறைவு விழாவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.