நடிகை கெளதமியிடம் நில மோசடி: | பாஜக பிரமுகர் அழகப்பன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

நடிகை கௌவுதமியிடம் நிலமோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய்…

நடிகை கௌவுதமியிடம் நிலமோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலம்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் மற்றும் சென்னை நீலாங்கரையில் சொத்து என நடிகை கௌதமிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் காரைக்குடி சி.அழகப்பன்,  அவருடைய மனைவி நாச்சாள்,  மகன் சிவா,  மருமகள் ஆர்த்தி,  உறவினர் பாஸ்கர் மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது நடிகை கௌவுதமி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி கேரள மாநிலத்தில் வைத்து 6 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.