முக்கியச் செய்திகள் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாகும் கவுதம் வாசுதேவ் மேனன்

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ், எல் எல் பி இணைந்து தயாரிக்கும் படம், ‘மைக்கேல்’ . ஆக்சன் என்டர்டெய்னர் படமான இதில், சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இவர், புரியாத புதிர், இஸ்படே ராஜாவும் இதய ராணியும், யாருக்கும் அஞ்சேல் படங்களை இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

’மைக்கேல்’ படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். படங்கள் இயக்குவதோடு கடந்த சில வருடங்களாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் கவுதம் வாசுதேவ் மேனன், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் புரட்சிக்கரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். ‘மைக்கேல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் கேரக்டர்களை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ்தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிலை கடத்தல் வழக்குகளை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு

Web Editor

சிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்

G SaravanaKumar

புதுச்சேரி ஏனாம் தொகுதியில் ரங்கசாமி பின்னடைவு

Halley Karthik