சரக்கு வாகனம் விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருவெண்ணெய் நல்லூர் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்…

திருவெண்ணெய் நல்லூர் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் துக்க நிகழ்வுக்காக தனது குடும்பத்தினர், உறவினர்கள் என 24 பேருடன் சரக்கு வானத்தில் வீரப்பார் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

பெரியசெவலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தேன்மொழி, சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.