முக்கியச் செய்திகள் தமிழகம்

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

சேலத்தில், எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சேலம் கருங்கல்பட்டியில் ராஜலட்சுமி என்பவரது வீட்டில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.

இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

விபத்து நடைபெற்ற வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. காலை ஆறு முப்பத்தி ஆறு நிமிடங்களில் அந்த விபத்து நடைபெற்றது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் தேர்வு

Halley karthi

4.8 கோடி பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்!

Halley karthi

கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!

Jayapriya