முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ் என்பவர் இரண்டரை லட்சம் ரொக்க பணத்தைத் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு கவணம்பட்டி ரோட்டில் உள்ள இரும்பு கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் செல்வராஜ் தனது மனைவியின் தாலி செயினை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த இரண்டரை லட்சம் ரொக்க பணத்தைத் தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்வதை கவனித்த மூன்று பேர் அவரை பின் தொடர்ந்தனர். அப்போது செல்வராஜ் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகேயிருந்த இரும்பு கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் பின்தொடர்ந்து வந்த மூவரில் ஒருவர் வாகனத்தில் இருந்த ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு அருகே வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மற்ற இருவரிடம் கொடுத்துவிட்டுத் தப்பி ஓடிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புடின் ஆரோக்கியமாக இருக்கிறார்: ரஷ்யா

Mohan Dass

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

G SaravanaKumar

27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்

EZHILARASAN D