வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற…

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரான கனிமொழி என்பவரின் தோட்டத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மாடுகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர், திடீரென மணிகண்டன் வீட்டிற்கு வந்து, அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்டோரை தாக்கியதாக கூறப்படுகிறது.


இரும்பு கம்பிகள், பைப்புகள், கற்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில், 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.