முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்வதும், தண்ணீர் வரியை குறைத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதில் நிறைவாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ‘இலவச மனைப் பட்டா விடுப்பட்ட எழை எளிய மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் ஆலோசித்து புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு குறித்து அரசு அறிவிக்கும் எனவும், குடியிருப்புகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த குப்பை வரி ரத்து செய்வ தாகவும் அறிவித்த அவர், கடந்த ஆட்சியில் வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி
மூன்று ரூபாய் குறைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

Ezhilarasan

தேர்தல் பரப்புரையில் திமுகவை கடுமையாக விமர்சித்த தினகரன்

Niruban Chakkaaravarthi

“கருப்புப் பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும்” – சி.டி.ரவி!

Halley karthi