முக்கியச் செய்திகள் இந்தியா

துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை: பாஜக எதிர்ப்பு

துர்கா பூஜைக்காக அமைக்கப்படும் பந்தலில் மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சிலையும் இடம்பெற இருப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பிரமாண்ட துர்கை
சிலைகளை நிறுவி பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த வருடத்துக்கான துர்கா பூஜை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, துர்கை அம்மன் சிலையுடன், மம்தா பானர்ஜி சிலையையும் நிறுவ, விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். விமான நிலையம் அருகே அமைக்கப்படும் பந்தலில் அவர் சிலையும் இடம்பெறுகிறது.

இதற்காக களிமண் சிலைகளை பிரமாண்டமாக வடிவமைக்கும் சிற்பியான மின்டு பால் என்பவர், மம்தா பானர்ஜியின் சிலையை வடிவமைக்க இருக்கிறார். பத்து கைகள் கொண்ட சிலையாக அதை வடிவமைக்க உள்ளனர். அதில் அவர் கைகளில் ஆயுதம் ஏதும் இருக்காது என்றும் அரசு திட்டங்களின் அடையாளங்களை வைத்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜியின் சிலை இடம்பெறுவது இது முதன்முறையல்ல. இந்நிலையில், மாநில பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா (Amit Malviya) இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது துர்கை அம்மனை அவமானப்படுத்துவதை போல உள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த செயலை மம்தா பானர்ஜி தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“என்னை கைவிட்டுவிடாதீர்கள்”: கண்ணீர்விட்டு அழுத திமுக வேட்பாளர்!

Ezhilarasan

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

Jayapriya

சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

Ezhilarasan