அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடி

பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…

பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.

மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை மாவட்டத்தில் 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 17 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பதாகக் கூறினார்.

பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சர்யமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது இருக்கும் முதலமைச் சரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை செல்லூர் ராஜூ அறிந்து வைத்திருப்பதாகக் கூறிய அமைச்சர் பொன்முடி, அவரது கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலனை செய்யப் படுமெனவும் உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.