சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு…

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே குற்றச்சாட்டுக்காக மாநிலம் முழுவதும் 16 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சவுக்கு சங்கரை சென்னை கமிஷனர் உத்தரவின்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, கடந்த 9ம் தேதி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான அதிகாரிகள், கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.