செல்போனால் வந்த வினை… மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

செல்போனை பயன்படுத்திக் கொண்டே வாட்டர் ஹீட்டரை போட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு (40). இவர் நேற்று மாலை…

செல்போனை பயன்படுத்திக் கொண்டே வாட்டர் ஹீட்டரை போட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு (40). இவர் நேற்று மாலை தனது நாயை குளிப்பாட்டுவதற்காக, வாட்டர் ஹீட்டர் மூலம் நீர் சூடேற்ற சென்றிருந்தார். சரியாக அந்த நேரத்தில், மகேஷ் பாபுவுக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அப்போது யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டே,  தவறுதலாக வாட்டர் ஹீட்டரை கையில் வைத்தவாறே இயக்கியிருக்கிறார்.

அப்போது மகேஷின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில், அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த மகேஷின் மனைவி, உடனடியாக அவரை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மகேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். கவனக் குறைவாக வாட்டர் ஹீட்டரையும் செல்போனையும் பயன்படுத்திய நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.