தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் எங்கள் உயிர் என்றால் விவசாயிகள் உயிர்நாடி. சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம். எந்த நாடு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறதோ அந்த நாடு வளமாகவும் செழிப்பாகவு இருக்கும்.
கடுமையான நிதி பற்றாக்குரை இருந்த போதிலும் தவெக அரசு ஆட்சிக்கு வந்து 15 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் விவசாய அமைப்புகளின் கருத்துக்களுக்கு இணங்க கடன் தள்ளுபடியின் வரம்பு உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரிய விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. அதன்படி இப்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ. 75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.
1 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடனுக்கு ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஒரு லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி வழங்கப்படும்.
அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்த போதிலும் இந்த கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 953.06 கோடி கூடுதல் சுமை ஏற்படும்” என்றார்.




