வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு முழு ஆதரவு உண்டு, அதிமுக ஒருபோதும் துரோகம் செய்யாது என தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த தின விழா
பொதுக்கூட்டத்தில் உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வுமான தளவாய் சுந்தரம் பேசியதாவது..

”அதிமுகவிற்கு இருக்கும் ஒரே கூட்டணி கட்சி பாஜக தான். வரும் பாராளுமன்றத் தேர்தலில் அந்த கட்சிக்கு அதிமுகவின் முழு ஆதரவு உண்டு. பாஜக விற்கு அதிமுக என்றும் துரோகம் செய்யாத கட்சி.
எம் ஜி ஆர் கட்சி கொடுத்த வாக்கை மீறாத கட்சி. எம்ஜிஆரை தனது பெரியப்பா என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மனதார ஏற்றுக்கொண்ட வரலாறு அதிமுகவிற்கு உண்டு என அவர் பேசினார்.” என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.







