சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழாரம்…!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.

அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.