FIFA 2026 : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்…!

உலககோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் – பெல்ஜியம் அணிகள் மோதின. கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் 30-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் பாபியன் ரூயிஸ் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பெல்ஜியம் அணியின் சார்ல்ஸ் டி கெட்லேரே, 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து போட்டியின் இரண்டவாது பாதியில் 88-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் மெரினோ ஒரு கோலை பதிவு செய்தார். ஆட்ட நேரமுடிவில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, பிரான்ஸை எதிர்கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.