தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சரிந்து ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கும் சவரனு க்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒருகிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




